சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்

சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை என கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்
Published on

ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே நான் சட்டசபையில் தமிழக அரசை புகழ்ந்து பேசுவதாக திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கூறியுள்ளார்.என்னை பற்றி கூறிய கருத்துகளுக்குஎல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை.

நான் பேசியதே வேறு. யாரையும் நான் புகழ்ந்து பேசவில்லை. அவருக்கு தெரிந்தால் படித்து தெரிந்து கொள்ளட்டும். எந்த காலத்திலும் நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சாதனைகளை பற்றி மட்டுமே பேசி உள்ளேன். இவர்கள் வேண்டுமானால் இடத்திற்கு தகுந்தாற் போல் மாறலாம். அந்த நிலை எனக்கு இல்லை. சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு நான் எந்த கருத்தும் கூறத்தயாராக இல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com