விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன் - ராஜேந்திர பாலாஜி பேச்சு

மாயையில் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன் -  ராஜேந்திர பாலாஜி பேச்சு
Published on

விருதுநகர்,

விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-

இன்ஸ்டா மூலம் மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டுகளை பெற முடியும் என்பது வெளிநாடுகளில் கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்று உள்ளது.

2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி வெற்றிவாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன். விஜய் வாங்கியது அனைத்தும் அதிமுகவின் ஓட்டுகளே. திமுகவின் ஓட்டு அப்படியே திமுகவிற்கே சென்றது.

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வந்து செயலாற்றுவது காலம் தந்த கொடை. விரிசல்களை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். ஈபிஎஸ் முதல்-அமைச்சராக வர வேண்டும் என 1 கோடியே 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். அதிமுகவை மக்கள் எளிதில் கைவிட மாட்டார்கள். அதிகாரத்திலேயே இருக்க வேண்டும், அப்போது தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலை அதிமுகவுக்கு இல்லை என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com