திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்: விஜயகாந்த் அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். #Karunanidhi #Vijayakanth
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்: விஜயகாந்த் அறிக்கை
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆஸ்பத்திரியில் கருணாநிதி சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம். சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் குழு கண்காணித்து வருகிறது. கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற்று மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி அரசியல் பணிகள் செய்ய பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், அவர்களைத் தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன், திருமாவளவன், கமல், சரத்குமார் உள்ளிட்டோரும் வருகை புரிந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க அழகிரி இன்று காலை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com