திமுக கூட்டணியில் காங்கிரசின் நிலையை கண்டு வருத்தமடைகிறேன் - விஜயதரணி

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு என்றைக்கும் ஒரு வளர்ச்சி இல்லாத சூழ்நிலை தான் இருந்து கொண்டிருக்கிறது என விஜயதரணி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசின் நிலையை கண்டு வருத்தமடைகிறேன் - விஜயதரணி
Published on

கன்னியாகுமரி,

தக்கலையில் நேற்று மாலையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

70 நாட்களாகியும் குழு அமைத்து தி.மு.க. தங்களிடம் பேச வில்லை என்ற விசயத்தை வருத்தத்தோடு காங்கிரஸ் தலை வர் செல்வபெருந்தகை பதிவு செய்திருப்பதை பார்த்தால். காங்கிரசை இந்த நிலைமைக்கு தி.மு.க. தள்ளிவிட்டதே என்ற வருத்தமான சூழ்நிலையாகதான் இதை பார்க்க முடிகிறது.

காங்கிரசை தி.மு.க. அடிமைத்தனமாக நடத்துவது நிச்சயமாக அந்த கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது அவர்களுக்கே ஒரு மானக்கேடு தான் என்பது எனது பார்வை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு என்றைக்கும் ஒரு வளர்ச்சி இல்லாத சூழ் நிலை தான் இருந்து கொண்டிருக்கிறது.

அதை தன்மானத்தோடு அவர்கள் எப்படியாவது சமாளித்து அங்கு இருந்து விடலாம் என்று முயற்சித்தும் கூட, தற்போது நாங்களாக அனுப்பவில்லை நீங்களாக சென்று விடுங்கள் என்று கூறுவது போல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை சென்று கொண்டிருக்கிறது.

அந்த விதத்தில் தி.மு.க. கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு விரிசலும் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் எப்போதும் தி.மு.க. கூட்டணி என்று தான் சொல்வார்களே தவிர அகில அளவில் இருக்கும் இந்தியா கூட்டணி என்று ஒரு நாளும் கூறியது கிடையாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் காரர்கள் மூன்றாம் பட்சமாக, நான்காம் பட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதைவிட ஒரு ஆதாரம் நமக்கு தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com