மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் - கமல்ஹாசன்
Published on

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே இருக்கிறது. நாங்கள் அடுத்த கட்ட வேளையில் இறங்கியிருக்கிறோம். மூத்த அரசியலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பழ கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறார். சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுவார். நேர்மையாளர்களின் கூடாரத்துக்கு அவரை மனதார வரவேற்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நாளை மறுநாள் நடைபெறும். மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 3-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. வேட்பாளர் தேர்வு குழுவில் பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தான் நேர்காணலை நடத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com