பா.ஜ.க.வில் பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்- முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி

விஜயதரணி த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் விரைவில் இணைய இருக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவ தொடங்கி இருக்கிறது
சென்னை,
கன்னியாகுமரி மாவட்ட விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தொடர்ந்து 3 முறை போட்டி யிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. சட்டசபையில் ஸ்டார் எம்.எல்.ஏ.வாக வலம் வந்து கொண்டிருந்தார்.
கட்சி பதவி வழங்குவதில் பல முறை அவமானங்களை சந்தித்து வந்த விஜயதரணி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து காங்கிரசில் இருந்து விலகியது மட்டுமின்றி தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பி னர் பதவி யையும் ராஜி னாமா செய்து விட்டு பாரதீய ஜனதாவில் சேர்ந் தார். பாரதீய ஜனதா வில் இணைந்ததும் அவருக்கு தகுந்த பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது இது குறித்து ஒரு முறை பா.ஜ.க. மேடையில் தனது ஆதங்கத்தை விஜயதரணி வெளிப்படுத்தினார்.
வருடங்கள் உருண்டோடி னாலும் விஜயதரணிக்கு பதவி வழங்கப்டாதது அவ ரது ஆதரவாளர்கள் மத்தி யில் ஆதங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சட்டமன்ற உறுப்பினராக 3 முறை பதவி வகித்த விஜயதரணி பதவி யை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்து காலங்கள் பல கடந்தும் எந்த பதவியும் விஜய தரணிக்கு வழங்கப் படாதது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டா ரத்தில் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் பதவி கிடைக்காத விரக்தியில் விஜயதரணி த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை யில் அக்கட்சியில் விரைவில் இணைய இருக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவ தொடங்கி இருக்கிறது.இது குறித்து விஜயதரணியை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-
தேசிய கட்சி யான பாரதீய ஜனதாவை நம்பி வந்துள்ளேன். விரைவில் எனக்கு கட்சியில் உரிய அங்கீகாரத்தை பாரதீய ஜனதா வெளியிடும் என நம்பிக்கையுடன் காத்திருக்கி றேன். யூகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளில் உண்மை இல்லை.நம்பிக்கையோடு பாரதீய ஜனதாவின் அரசியல் களத் தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். என் நம்பிக்கை வீண் போகாது என நம்பு கிறேன். எனவே இதைத் தாண்டி மற்ற விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.






