நண்பர் என்ற முறையில் ராமதாசை சந்திக்க வந்தேன் - குருமூர்த்தி பேட்டி

ஆடிட்டர் குருமூர்த்தியும் பாமக நிறுவனர் ராமதாசும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை,
பாமகவில் உள்கட்சி மோதல் நடைபெற்று வரும் நிலையில், இன்று ராமதாசை அன்புமணி சந்தித்தார். ராமதாஸ் சென்ற சிறிது நேரத்திலேயே ஆடிட்டர் குருமூர்த்தி தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தார். ஆடிட்டர் குருமூர்த்தியும் பாமக நிறுவனர் ராமதாசும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க பாஜகவின் ஆதிக்கம் இருப்பதாக அரசியல் நிபுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த குருமூர்த்தி, ராமதாசை சந்தித்தது குறித்து பேசியதாவது;
"பாஜகவுக்காக நான் தைலப்புரம் வரவில்லை. எனது நீண்ட கால நண்பர் ராமதாஸ். நண்பர் ராமதாசை சந்தித்து பேசினேன்.வேறு ஏதும் இல்லை. நட்பு ரீதியாக சந்தித்து நீண்ட நேரமாக பேசினேன். நண்பர் என்ற முறையில் சந்திக்க வந்தேன். அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது. "இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமாதானம் பேச வந்தீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி பதில் அளித்தார்.






