நினைத்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை - பழனிவேல் தியாகராஜன்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது.
நினைத்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை - பழனிவேல் தியாகராஜன்
Published on

மதுரை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. மதுரை மத்தி தொகுதியில் திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தான் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன். இவர் மீண்டும் அதே தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிடுகிறார். இன்று தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவர் பேசியதாவது:-

மதுரைக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் நினைத்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், இதற்கு மேல் அரசியலில் இருப்பவர்களால் அதிகம் வெளிப்படையாக பேச முடியாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com