அதிமுகவில் சேர்க்கும்படி யாரிடமும் நான் சிபாரிசு கேட்கவில்லை - ஓ.பன்னீர் செல்வம்

என் விஸ்வாசத்திற்கு நற்சான்று தந்தவர் ஜெயலலிதா என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுகவில் சேர்க்கும்படி யாரிடமும் நான் சிபாரிசு கேட்கவில்லை - ஓ.பன்னீர் செல்வம்
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விசுவாசத்தை பொறுத்தவரை ஜெயலலிதா எனக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். அதிமுகவில் பிரச்சினையை யார் உருவாக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால்தான், திமுகவை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும்.

6 மாதம் அமைதியாக இருந்தால் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதாக ராஜன்செல்லப்பா கூறியிருந்தார்; ராஜன் செல்லப்பாவின் சிபாரிசு தேவையில்லை; அவர் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை. என்னை அதிமுகவில் சேர்க்கும்படி யாரிடமும் நான் கேட்கவில்லை. இதற்காக யார் வீட்டு வாசலிலும் நான் நிற்கவில்லை. என் மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கச் சொன்னதே ஜெயலலிதாதான்.

ஆர்.பி உதயகுமார் அதிமுகவில் என்ன நிலையில் இருந்தார் என்று நான் கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததற்கு முழு காரணகர்த்தா அவர்தான். என்னை பற்றியோ, என் குடும்பத்தை பற்றியோ பேசுவதை உதயகுமார் நிறுத்திக் கொள்ள வேண்டும். இருமொழிக் கொள்கையையே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றி வந்தனர். இருமொழிக் கொள்கையையே தமிழக மக்கள் உயிர்மூச்சாக கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com