வெளியே வர தைரியம் இல்லை; குரல் கொடுத்தால், ஆட்சி மாறிவிடுமா? - விஜய்யை சாடிய கி.வீரமணி

கருப்பு சட்டைக்காரரின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உங்கள் கதை நடக்காது என்று கி.வீரமணி கூறினார்.
வெளியே வர தைரியம் இல்லை; குரல் கொடுத்தால், ஆட்சி மாறிவிடுமா? - விஜய்யை சாடிய கி.வீரமணி
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நுற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டுக்கான நினைவு கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆவண புத்தகத்தை வெளியிட்டார்.

விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-

சுயமரியாதை கொள்கையோடு கடமை-கன்னியம்-கட்டுப்பாடு என்று அண்ணா தந்த கோட்பாட்டோடு கலைஞர் வழிநின்று மக்களுக்காக ஒய்வின்றி உழைத்து வரும் மின்சாரம் முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின். அந்த மின்சாரத்தை இப்போது புதிதாக வரும் மின்மினி பூச்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது.

அந்த பூச்சிகளை நம்பிக் கொண்டு எந்த சந்தர்ப்பமாவது கிடைக்காதா? என வடக்கே இருந்து வந்தவர்கள் ஆழம் பார்க்க நினைக்கிறார்கள். நீங்கள் ஆழம் பார்க்க நினைத்தால் பெரியார் மண் உங்களை மூடிவிடும். Chief Minister Sir என குரல் கொடுத்தால், ஆட்சி மாறிவிடுமா?. இன்றைக்கு உங்களுக்கு (விஜய்க்கு) வெளியே வர தைரியம் இல்லை. உங்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி நீதிமன்றம் தோலை உரித்துள்ளது. இந்த ஆட்சிக்கு சவால் விடுகிறீர்களா?. கருப்பு சட்டைக்காரரின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உங்கள் கதை நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com