தவெக தலைவர் விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் - நடிகர் பார்த்திபன்

தவெக தலைவர் விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் - நடிகர் பார்த்திபன்
Published on

சென்னை,

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக நடிகர் பார்த்திபன் பல்வேறு கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய்யை தாம் சந்தித்து வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் குறித்து விவாதிப்பது போல கனவு கண்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள்.

சரி அதை பதிவு செய்ய ஒரு செல்பி எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் … அது கனவு. ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் …இப்படி சில பல காரணமாக இருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com