

சென்னை,
சென்னை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நதிநீர் பங்கீடு குறித்து பேசுவதற்காக கேரள முதல் அமைச்சரை சந்திக்க செல்கிறேன்.
நதிநீர் தெடர்பான அனைத்து விஷயங்களும் பேசி தீர்க்கப்படும். தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
தமிழகம், கேரளா இடையே நல்லுறவை மேம்படுத்தும் பேச்சுவார்த்தையாக அமையும் என்று கூறிய அவரிடம், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை சந்திப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அ.தி.மு.க.விற்கு எந்த பயமும் இல்லை என்று பதிலளித்து உள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணை திறக்கப்பட உள்ளது. தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.