எனக்கு வேலைகள் அதிகம் உள்ளன: விஜய் குறித்த கேள்வியால் கமல் கோபம்

தேர்தல் வேலை இருப்பதால், ரஜினியுடன் நான் இணைந்து நடிக்கும் படத்திற்கான வேலைகளை, தேர்தல் முடிந்த பின், துவங்குவோம் என்று கமல்ஹாசன் கூறினார்.
எனக்கு வேலைகள் அதிகம் உள்ளன: விஜய் குறித்த கேள்வியால் கமல் கோபம்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா கூட்டணியில் தொடர்கிறேன். லாப நோக்கத்திற்காக கூட்டணியில் இல்லை. இந்தியா கூட்டணியில் இருப்பதை கடமையாக கருதுகிறேன். திமுகவுன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்வேன்” என்றார். தவெக தலைவர் விஜய், பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறதே அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கமலிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நான் ஏன் அதை பார்க்க வேண்டும். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன” என்றார். மக்கள் நீதி மய்யத்தில் புதியவர்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் இருக்கும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com