‘எனக்கு 20 வயது குறைந்திருக்கிறது’ - செங்கோட்டையன் பேச்சு

ஒரு நாட்டை மாற்றுவதற்கு நல்ல தலைமை தேவை என செங்கோட்டையன் தெரிவித்தார்.
‘எனக்கு 20 வயது குறைந்திருக்கிறது’ - செங்கோட்டையன் பேச்சு
Published on

கோவை,

கோவையில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது. இளைஞராக ஓடுவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் என்னை தயார்படுத்தி இருக்கிறார். இரவு, பகல் பாராமல் உழைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் லட்சியம்.

ஒரு நாட்டை மாற்றுவதற்கு நல்ல தலைமை தேவை. முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 2 தலைமைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள். ஆனால் அவர்களுக்குப் பிறகு இன்று நடக்கின்ற ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அனைத்தையும் மாற்றக் கூடிய சக்தி த.வெ.க. தலைவர் விஜய்யிடம் மட்டும்தான் இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com