'நற்பணி செய்ய வந்துள்ளேன்.. என் இலக்கு பெரியது' - கமல்ஹாசன் பேச்சு


நற்பணி செய்ய வந்துள்ளேன்.. என் இலக்கு பெரியது - கமல்ஹாசன் பேச்சு
x

தமிழ்நாட்டிற்கு நற்பணி செய்ய தான் வந்திருப்பதாக மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, “என்னுடைய இலக்கு பெரியது. தமிழ்நாட்டிற்கு நற்பணி செய்ய நான் வந்திருக்கிறேன். நான் உங்களை தயார் செய்வது அரசுடன் பேசுவதற்குதான். மநீம கட்சி கனவுகளை நனவாக்கும் கத்தி. அதை அப்படியே விட்டால் துருப்பிடித்துவிடும்.

என்னுடைய முதல் அரசியல் எதிரி சாதிதான். நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க. ஆனால் சாதியுடன் வாழ வேண்டாம். சிறுவயதில் அதிகம் சாமி கும்பிட்டு இருக்கிறேன். அதற்காக நான் யாரையும் அவமதிக்கவில்லை. கோவிலாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் சரி எங்கு உண்டியல் வைத்தாலும் அது பிரச்னைதான்.” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தந்தை தன் குழந்தை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என நினைப்பதுபோல மநீம 100 ஆண்டுகளைத் தாண்டி செயல்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். தேர்தல் பிரசாரம் குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் தெரிவிப்போம்.” என்றார்.

1 More update

Next Story