’நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்’ - ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த சில வாரங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார்.
’நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்’ - ஓ.பன்னீர்செல்வம்
Published on

நெல்லை,

திமுக சார்பில் தேர்தல் பரப்புரையை ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அதேசமயம் திமுக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், நெல்லையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக கூறினார்.

அவர் கூறுகையில், “நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இபிஎஸ்-க்கு நான் ஆதரவு அளித்தது மிகப்பெரிய தவறு. இபிஎஸ்-க்கு எதிராக வாக்களித்திருந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும். நான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவின் கோட்டைகளில் ஓட்டை விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டன. இபிஎஸ்-ஆல் ஒன்றும் செய்ய முடியாது,” என்றார்.

Also Read
ரஜினிகாந்த் அன்புக்குதான் அடிமை, மிரட்டலுக்கு அல்ல - அமைச்சர் ரகுபதி
’நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்’ - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த சில வாரங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் இணைந்தார். 2022ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சட்டரீதியாகவும் சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமும் மீண்டும் சேர முயன்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் அவருக்கு மீண்டும் இடம் அளிக்கப்படவில்லை. இதனால் அவர், திமுகவில் இணைந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com