அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம்: என்கிட்ட ஆதாரம் இருக்கு - அண்ணாமலை பரபரப்பு பேட்டி


அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம்:  என்கிட்ட ஆதாரம் இருக்கு - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 30 Jan 2025 11:47 PM IST (Updated: 31 Jan 2025 6:03 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எப்போதும் தமிழகத்தின் தோழனாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார். மண்ணின் மைந்தர்களுக்காக டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை பிரதமர் ரத்து செய்துள்ளார். சட்டசபையில் தீர்மானம் போட்டதால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யவில்லை. மக்களின் போராட்டம் நூறு சதவீதம் நியாயமானது. நாங்கள் எங்களின் கடமையை செய்துள்ளோம். அரிட்டாபட்டி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறை அறிக்கை வேடிக்கையாகவுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தவறு இருப்பதுபோல காவல்துறை கூறுவது சரியல்ல. அனைத்து விஷயங்களிலும் தமிழக அரசு பொய் சொல்கிறது. பொய்யான அறிக்கையை கொடுத்து காவல்துறை எத்தனை முறை அவர்கள் முகத்திலேயே கரியை பூசிக் கொள்வார்கள்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் செல்போன் அழைப்பு விவரங்கள் என்னிடம் உள்ளது. ஓராண்டு காலம் அவர் யார், யாருடன் எல்லாம் பேசினார் என்கின்ற ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அண்ணா பல்கலை மாணவி வழக்கில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை காவல்துறை வெளியிடாவிட்டால், நானே வெளியிடுவேன். குற்றச்சம்பவம் நடந்த அன்று ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்கள் என்னிடம் உள்ளது. என்கிட்ட ஆதாரம் இருக்கு.நீங்க கருப்புக்கொடி காட்டுறதுனால அமித்ஷா பயந்துடுவாரா என்ன?... கருப்புக்கொடி மட்டும் இல்ல வேற எதனா வேணும்னா கூட சொல்லுங்க என் கை காசு போட்டு வாங்கி தரேன் என்றார்.

1 More update

Next Story