இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
Published on

ஈரோடு,

ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளுக்கும் நன்றிகள். நேற்று முதலே தேர்தல் பிரசார வேலைகளை திமுக தொடங்கியிருக்கிறது.

இதற்காக காங்கிரஸ் கட்சிக்காரன் என்ற அடிப்படையில் முதல் அமைச்சருக்கும் திமுகவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று நினைக்கிறேன். இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். நான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com