உதயநிதிக்கு பதில் சொல்லலாம் என நினைத்தேன்; விஜய்தான் தடுத்துவிட்டார்: ஆதவ் அர்ஜுனா

திமுக தோல்விக்கு ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் மட்டுமே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
உதயநிதிக்கு பதில் சொல்லலாம் என நினைத்தேன்; விஜய்தான் தடுத்துவிட்டார்: ஆதவ் அர்ஜுனா
Published on

தவெக நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டமன்றத்தில் பேசும்போது எழுந்து பேசலாம் என்று நினைத்தேன்; அண்ணன் (முதல்வர் விஜய்) வரும்போதே, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டும்தான், நாம் யாரும் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டார்"

திமுக தோல்விக்கு ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் மட்டுமே காரணம். இதற்கு மேல ரொம்ப ஆய்வு பண்ண வேனாம். விஜய்யை முதல்வராகக்கூடாது என்பதற்காக திமுகவும் அதிமுகவும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஒரு தொழிலதிபர் ஆளுநர் மாளிகையில் இருந்தபடி உதவினார்.

சபரீசனும் உதயநிதியும் திமுக ஆட்சியை முடித்தது போல, கட்சியை முடிக்கும் வேலையில் இறங்கினர். உதயநிதியும் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனும் பேசினர். அதனால்தான் அதிமுகவில் இருந்து சிவிசண்முகம் உள்ளிட்டோர் வெளியே வந்தனர். பதவி வெறி காரணமாக உதயநிதி ஸ்டாலின் விஜய் முதல்வராகுவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆளுநர் தடை போட்டபோது ராகுல் காந்தி தான் தவெக ஆட்சிக்கு கை கொடுத்தார்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com