சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்
Published on

சென்னை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிராத்தனை செய்வதில் தமிழக மக்களுடன் நானும் இணைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com