“கலைஞரின் பிறந்த நாளில் எனது வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்..” - முதல்-அமைச்சர் விஜய் பதிவு

கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் தனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
“கலைஞரின் பிறந்த நாளில் எனது வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்..” - முதல்-அமைச்சர் விஜய் பதிவு
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் தனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிப்பதாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com