தீரன் சின்னமலையின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் - எல்.முருகன்

ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை துணிச்சலுடன் எதிர்கொண்டவர் தீரன் சின்னமலை என எல்.முருகன் தெரிவித்தார்.
தீரன் சின்னமலையின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் - எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்ததை துணிச்சலுடன் எதிர்கொண்ட, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர்களால் போர் செய்து வீழ்த்தவே முடியாத சிம்மசொப்பனமாய் திகழ்ந்து, ஆங்கிலேயர்கள் விதித்த கடுமையான வரிகளை, அவர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு வழங்கியவர் மாவீரன் தீரன் சின்னமலை .

இந்நாளில் அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com