பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி

எதிர்கொண்ட அனைத்துப் போர்களிலும் தோல்வியே காணாமல், போர்க்களத்தில் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த தன்னிகரில்லா மாவீரர் என்று எடப்பாடி கூறினார்.
பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்மொழி காக்க, தமிழ்மண் காக்க, முதுதமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டவர், புகழ்மிக்க தமிழ்நிலத்தின் புலவர்களை அரவணைத்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர், எதிர்கொண்ட அனைத்துப் போர்களிலும் தோல்வியே காணாமல், போர்க்களத்தில் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த தன்னிகரில்லா மாவீரர்.

ஆளுமைக்கும் வீரத்திற்கும் அடையாளமாகத் திகழ்ந்த "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" அவர்களின் 1351-ஆம் ஆண்டு சதய விழா நாளில், அவர்தம் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com