அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து


அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்  - எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
x

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story