அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்; ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story