இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை திராவிட மாடல் அரசு அணையாமல் பாதுகாக்கும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இரட்டைமலை சீனிவாசன் ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம், நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார்!

அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன்!

அவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தினைத் திறந்து வைத்து, இரட்டைமலையாரைக் கொண்டாடிய நமது திராவிட மாடல் அரசு என்றும் அவர் ஏற்றிய உரிமைச் சுடரை அணையாமல் பாதுகாக்கும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com