ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராக ஆகி இருக்க வேண்டும்: செங்கோட்டையன் பேச்சு

ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராக ஆகி இருக்க வேண்டும், ஏமாந்து விட்டுவிட்டேன் என்று செங்கோட்டையன் கூறினார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராக ஆகி இருக்க வேண்டும்: செங்கோட்டையன் பேச்சு
Published on

கோபி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் செங்கோட்டையன் பிரசார வேனில் இருந்து பேசியதாவது: -

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு ‌டெல்டா விவசாயிகளுக்கு அடிக்கடி ஏற்படும் உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மத்திய அரசின் நெருக்கடியாக இருந்தாலும் அந்தத் திட்டத்தை தமிழக வெற்றிக்கழக அரசு முழுமையாக நிராகரிக்கும். ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும். விவசாயிகளுக்கு ஏற்படும் உரத்தட்டுப்பாடு முற்றிலும் நிவர்த்தி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும்”என்றார்.

தொடர்ந்து ஈரோட்டில் செங்கோட்டையன் பேசியதாவது: ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராக ஆகி இருக்க வேண்டும், ஏமாந்து விட்டுவிட்டேன். ராத்திரி வரைக்கும் நான் தான், காலையில் தான் காட்சி மாறி போய்விட்டது. அந்த ஆள் கையில் பெட்டி இருந்தது. என் கையில் பெட்டி இல்லை. ஆனால் நான் காலையில் பார்த்தேன், சசிகலா என்னிடம் கேட்டார்கள், சரி பரவாயில்லை, யாரோ ஒரு ஆள் இருந்துட்டு போகிறார்கள் என்றார். அந்த அம்மா நீங்க செங்கோட்டையன் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் கட்சி உடையாமல் பார்த்து கொள்ளலாம் என்று சொன்னேன். அந்த அம்மா நீங்கள் தான் முதல்வர் வேட்பாளர், செங்கோட்டையனும் சொல்லிவிட்டார் கவலையில்லை என்று தோளை தட்டி பிடித்தார்கள். உடனே மலைப்பாம்பு போல காலில் விழுந்து விட்டார்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com