மு.க. ஸ்டாலின் மீது இப்போதும் மரியாதை உள்ளது; கார்த்தி சிதம்பரம்

ஆட்சி அமைக்க முடியாத திமுக முதுகில் காங்கிரஸ் குத்தியது என சொல்வது பொருத்தமற்றது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் மீது இப்போதும் மரியாதை உள்ளது; கார்த்தி சிதம்பரம்
Published on

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தவெக வாக்கு வாங்கும் என்று முன்பே சொன்னேன். சீட்டாக மாறுமா என்றால் இல்லை என்றேன். அது தவறு. என்னுடைய தவறான கணிப்பு அது. பெரும்பாலானவர்கள் சரியாக கணிக்கவில்லை. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு நற்பெயர் உள்ளது. இந்த தேர்தலில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நற்பெயர் இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

இனிமேல் கொஞ்ச நாளைக்கு அந்த நற்பெயர் இருக்கும். அவரது செயல்பாட்டைப் பொறுத்து அந்த நற்பெயர் எப்படி வளரும் என்று பார்க்க வேண்டும். தவெக என்பது பிரதான அரசியல் கட்சியாக தமிழகத்தில் இருக்கும். அதேபோல், திமுகவும் பிரதான அரசியல் கட்சியாக இருக்கும். திமுகவை குறைத்து மதிப்பிட்டால் அது அரசியல் புரிதல் இல்லை என்றே அர்த்தம். அதிமுகவும் பாஜகவும் இந்த தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளன.

நிலையான ஆட்சி, மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதால் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வேண்டுகிறோம். தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதால் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும். ஸ்டாலின் மீது இப்போதும் மரியாதை உள்ளது. ஆட்சி அமைக்க முடியாத திமுக முதுகில் காங்கிரஸ் குத்தியது என சொல்வது பொருத்தமற்றது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com