நான் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது - ஆடிட்டர் குரு மூர்த்தி விளக்கம்

நான் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது என்று ஆடிட்டர் குரு மூர்த்தி கூறி உள்ளார்.
நான் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது - ஆடிட்டர் குரு மூர்த்தி விளக்கம்
Published on

சென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அதிமுகவின் கட்சி பதவியிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதிரடியாக நீக்கினர்.

இந்த நடவடிக்கைப் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி,ஆறு மாதங்கள் கழித்து ஆர்.கே.நகர் தோல்விக்குப் பிறகு 9 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள். என்று பதிவிட்டு அந்தப் பதிவில் முதல்வரையும் துணை முதல்வரையும் அசிங்கமான வார்த்தையால் குறிப்பிட்டார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

ஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. ஆண்மை இல்லாதவர்கள் அதைபற்றி பேசுவார்கள். இவ்வளவு கீழ்தரமான வார்த்தைகளை பேசுவது ஜனநாயகத்தில் வெட்கி தலை குனிய வேண்டியது.

ஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா? எதற்கும் ஒரு எல்லை உண்டு. அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர்; எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும்.

அவசியம் ஏற்பட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும். தடித்த வார்த்தை கூற கூடாது, அப்படி இல்லையென்றால் நாங்கள் நூறு வார்த்தை சொல்வோம் இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த ஆடிட்டர் குருமூர்த்தி ஈபிஎஸ் - ஓபிஎஸ் அரசுக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன் என்ற தவறான எண்ணத்தை நீக்கியதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி.

ஆர்.கே.நகர் தேர்தலை மன்னார்குடி ஆதரவாளர்கள் விலைக்கு வாங்கிய போதும், காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை .

ஒரு எழுத்தாளராக இது அவர்களுக்குப் பிடிக்கிறதா என்பதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அ.தி.மு.க தலைமை மிக பலவீனமாகத்தான் இருக்கிறது என்பது குறித்து விமர்சனங்களைத் துக்ளக் இதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் என கூறினார்.

பின்னர் தான் குறிய வார்த்தை குறித்து முழு விளக்கம் அளித்துள்ளார் அத்யன் விவரம் வருமாறு:-

முதலில் Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது.

இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.

நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன்.

நான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தான். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் disgrace என்கிற வார்த்தை நாடாளுமன்றத்துக்கு ஏற்றதல்ல. Impotent அல்லது incompetent என்கிற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்று disgrace என்கிற வார்த்தையை உறுப்பினர் வாபஸ் பெற்றார். அதனால் impotent என்பது சாதாரண வார்த்தை.

பத்திரிகைகளில் impotent என்கிற வார்த்தையை சாதாரணம். "Impotent prime minister" என்று கூகிள் செய்யுங்கள் 988 முறைகள் பத்திரிகைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். செப் 27 அன்று http://atlantic.com இப்படி தலைப்பு செய்தி கொடுத்தது "Trump deleted tweets that show his impotence"

எனவே அதிமுக அமைச்சர் மட்டுமே impotent என்கிற வார்த்தையை ஆண்-பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நான் பொறுப்பல்ல. இத்துடன் நான் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது என்று கூறி முடிக்கிறேன். என கூறி உள்ளார்.

முன்னதாக அவர் கூறி உள்ள டுவிட்டர் தகவலில் முக்கியமான ஒரு சட்ட ஆலோசனையில் இருப்பதால் அமைச்சருக்கு முழுவதுமாக பதிலளிக்க முடியவில்லை. கொஞ்சம் பொருக்கவும். என்னுடைய முழு பதிலையும் கொடுக்கிறேன். காத்திருக்கவும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com