நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி

உணவு தானிய உற்பத்தியில் தமிழக விவசாயிகள் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி
Published on

சென்னை,

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: -

தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும். கல்லணை கால்வாய் சீரமைப்பால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் பயனடையும். அர்ஜூன் பீரங்கி தயாரிப்பின் மூலம் பீரங்கி உற்பத்தியின் மையமாக தமிழகம் உருவெடுக்கிறது.

கொரோனா காலத்திலும் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கப்பணிகள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் ரெயில் பாதை குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது. நீராதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது தமிழகம்.

கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தினால், தஞ்சை, புதுக்காட்டை மாவட்டங்கள் பயனடையும். இந்திய மீனவர்களை எண்ணி நாம் பெருமை கொள்கிறோம்; மீன்பிடி தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com