தயாரிப்பாளர் கே.ராஜன் காலமான செய்தி அறிந்து வேதனையடைந்தேன் - பிரேமலதா

மறைந்த அவர்தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் காலமான செய்தி அறிந்து வேதனையடைந்தேன் - பிரேமலதா
Published on

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், சமூகப் பார்வையுடன் கருத்துக்களைத் தைரியமாக வெளிப்படுத்தியவருமான கே. ராஜன் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தமிழ்த் திரைப்படத் துறையில் சிறிய தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் கே. ராஜன். கேப்டனின் சிறந்த நண்பர், மேலும் திரைப்பட உலகின் பல்வேறு சவால்கள் குறித்து வெளிப்படையாக பேசி, பலருக்கும் துணைநின்ற அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மறைந்த அவர்தம் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com