அதிமுகவில் எனக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை: நடிகர் ராமராஜன்


அதிமுகவில் எனக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை: நடிகர் ராமராஜன்
x

முன்னாள் எம்.பி.யான எனக்கு அதிமுகவில் எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை என்று ராமராஜன் கூறினார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர்,

ஶ்ரீவில்லிபுத்தூரில் நடிகர் ராமராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:இன்றைய அரசியல் களத்தில் ஏதோ நடக்கிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. வேட்புமனு வாபஸ் பெரும் கடைசி நாளில் கூட அரசியல் மாறலாம். எனது உயிர் உள்ளவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நடப்பேன். அதிமுக எம்.பியாக இருந்துள்ளேன்.

இப்போது எனக்கு அதிமுகவில் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. அதனால் கட்சி விவகாரம் குறித்து என்னால் கருத்து சொல்ல இயலாது. குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். அதுபோல் தான் அதிமுக உட்கட்சி பிரச்சினையும். ஆனால் இறுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தான் அனைவரும் செல்வார்கள். நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story