இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் - ஓ.பன்னீர்செல்வம்

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
“என் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிப்பேன். பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. நான் எந்த ஒரு புதிய கட்சியையும் ஆரம்பிக்க போவதாக இல்லை. இன்று இருக்கும் அதிமுக தலைமையால், திமுகவை வெல்ல முடியாது. அதிமுகவை மீட்டெடுக்க நான் நடத்தும் சட்டப்போராட்டத்துக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






