

புதுச்சேரி,
மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்வது குறித்து கேட்டபோது படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் பாராட்டுவேன் என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை கூறுகையில் ,
என்னை பொறுத்தவரை படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. எனக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர் கொள்கை உள்ளவர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்பவர்களை பாராட்டுவேன். அதன் உள்நோக்குத்துக்குள் நான் வரவில்லை என்றார்.