கொளுத்தி விடுவேன்... பேசிய வாடகையை தராமல் ஆட்டோ ஓட்டுனரை மிரட்டிய பெண்

அப்போது ஓட்டுனர், நீங்கள் பெண் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வீர்களா? என கேட்கிறார்.

கொளுத்தி விடுவேன்... பேசிய வாடகையை தராமல் ஆட்டோ ஓட்டுனரை மிரட்டிய பெண்
Published on

கோவை

கோவையில், பேசிய வாடகையை தராமல் ஆட்டோ ஓட்டுனரை பெண் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கோவை காந்திபுரத்தில் இருந்து வடகோவை வரை செல்வதற்காக ஆன்லைன் மூலமாக ஆட்டோவை புக் செய்த பெண் ஒருவர் 100 ரூபாய்க்கு வாடகை பேசிவிட்டு இறங்கும்போது வாடகை தர மாட்டேன், அப்புறம் தருகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

ஆட்டோ ஓட்டுனர்

அப்போது ஆட்டோ ஓட்டுனர் நான் பேசிய வாடகையை தர வேண்டும் என கூறியுள்ளார். அப்போது தன்னை துன்புறுத்தியதாக புகார் அளிப்பேன், என அந்த ஆட்டோ ஓட்டுனரை மிரட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.

அந்த பெண், கூடுதலாக பணம் கேட்கிறீர்கள். இதுபோன்று பணம் கேட்பது கூட துன்புறுத்தல்தான். இந்த விதி தெரியாதா? என கேட்கிறார். தற்போது பணம் தர முடியாது. பிறகு பணம் தருகிறேன் என்றார். ஆனால், அந்த ஓட்டுநர், நீங்கள் பணம் தருவேன் என முன்பே பேசினீர்கள். அதனால்தானே நான் உங்களை என்னுடைய ஆட்டோவில் அழைத்து வந்தேன். தற்போது, பிறகு பணம் தருகிறேன் என்கிறீர்கள்.

காரசார வாக்குவாதம்

நீங்கள் யாரென்றே தெரியாது. பிறகு எப்போது பணம் தருவீர்கள். எனக்கு, உடனே பணம் கொடுங்கள் என கேட்கிறார். தொடர்ந்து காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஓட்டுனர், நீங்கள் பெண் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வீர்களா? என கேட்கிறார்.

அதற்கு அந்த பெண், ஆம். நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். என் முன்னால், விரலை நீட்டி பேசுகிறாய். விரலை வெட்டி விடுவேன். ஆட்டோவை கொளுத்தி விடுவேன். என்ன நினைத்து கொண்டிருக்கிறாய்? எல்லாவற்றையும் வெட்டி விடுவேன் என மிரட்டும் வகையில் பேசியது வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com