தேர்தலில் அதிமுகவிற்கு மட்டுமே வாக்கு கேட்பேன்: ஓ பன்னீர் செல்வம்


தேர்தலில் அதிமுகவிற்கு மட்டுமே வாக்கு கேட்பேன்: ஓ பன்னீர் செல்வம்
x

விஜய் பேச்சு ஈர்ப்பதாக இல்லை என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறினார்.

கோவை,

அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக்குழுவை நடத்தி வரும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தேர்தலில் அதிமுகவிற்கு மட்டுமே வாக்கு கேட்பேன் எனக்கென்று தனி இலக்கு எதுவுமில்லை. அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பதே என் இலக்கு.

பிரிந்து இருக்கும் அனைவரும் சேர்ந்து போட்டியிட்டால் மட்டுமே அதிமுக அட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை பாஜக ஏற்றாலும் மக்கள்தான் அதை தீர்மானிப்பார்கள். விஜய் பேச்சு ஈர்ப்பதாக இல்லை. அரசியல் கருத்துக்கள் எதுவும் இல்லை. மாநாட்டில் விஜய் தமாசாக பேசினாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது பேச்சு எற்புடையதாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story