நாளை பகல் 12 மணிக்கு மனம் திறக்கிறேன் - அண்ணாமலை அறிவிப்பு

உங்கள் அனைவரையும் சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாட ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
நாளை பகல் 12 மணிக்கு மனம் திறக்கிறேன் - அண்ணாமலை அறிவிப்பு
Published on

சென்னை,

கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதா மாநி லத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக. அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

புதிய மாநிலத்தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தலைமை யில் பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. பட்டும்படாமல் தேர்தல் களத்தில் அண்ணாமலை பணியாற்றினார். அ.தி.மு.க.விடம் 27 இடங்களை கேட்டு வாங்கிய பா.ஜனதா. ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

அண்ணாமலை

கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான மாநிலத்தலைவர் நயினார் நாகேந்தி ரன். டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் தோல் வியை தழுவினர். நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 11 சதவீத வாக்கு, 2 சதவீதமாக குறைந்து போனது.

ராஜினாமா

இதற்கிடையே, பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் பா.ஜனதாவில் இருந்து ராஜினாமா செய்கிறார். புதிய கட்சியை தொடங்குகிறார் என்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் ரெக்கை கட்டி பறந்தது.

அதற்கேற்ப தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து 5 பக்க கடிதத்தையும் அளித்தார். தொடர்ந்து, மத்திய உள் துறை மந்திரி அமித்ஷாவையும், தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷையும் அவர் சந்தித்து பேசினார். அப் போது அவர்கள் அண்ணாமலையிடம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், கொஞ்சம் காத்திருக்கவும் என்று கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அவர் டெல்லி யில் முகாமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இருப்பினும், அண்ணாமலை தன்னுடைய ராஜினாமா முடிவில் சற்றும் பின்வாங்க போவதில்லை என்ற உறுதியோடு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில், மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லி வர வேண்டும் என்று தேசிய தலைமை உத்தரவிட்டது. பா.ஜனதாவின் அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் தமிழக அரசியல் களமும். தமிழக பா.ஜனதாவும் பெரும் அதிர்வை கண்டது. அண்ணாமலை மத்திய தலைமையிடம் தெரிவித்த புகாரின் அடிப்படையிலே நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டார் என்ற தகவல் கசிந்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பா.ஜனதாவின் தலைமையை ஏற்று அண்ணாமலை மீண்டும் பா.ஜனதாவில் தொடருவாரா? அல்லது அடுத்தகட்டமாக என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தொற்றி கொண்டு இருந்தது.

புதுக்கட்சி தொடங்குகிறார்

இந்த நிலையில் நேற்று இரவு புதிய தகவல் ஒன்று வெளியானது. அதில் பா.ஜனதாவில் இருந்து விலகிய அண்ணா மலை, தனிக்கட்சி ஒன்றை புதிதாக தொடங்க இருப்பதாகவும். அது மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சியாகவும். தமிழ்நாட்டை அடிப்படையாக வைத்து இயங்கக்கூடிய கட்சியாகவும் இருக்கும் என்றும், முழுக்க முழுக்க இளைஞர் களை மையப்படுத்தியே அந்த கட்சி செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புது கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

மனம் திறக்கிறேன்

இந்தநிலையில், நாளை பகல் 12 மணிக்கு மனம் திறக்கிறேன் என அண்ணாமலை அறிவிப்பை ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.

உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு பதிவில், நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் இந்த அதிரடி அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று தமிழக மக்களும் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறனர்.

தனிக்கட்சி தொடங்கி வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் இந்த பதிவு தமிழகத்தை பரபரப்பாக்கி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com