'அந்தரங்கபடங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன்' இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டல்

அந்தரங்கபடங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக கூறி மிரட்டல் விடுத்து இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
'அந்தரங்கபடங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன்' இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டல்
Published on

திருவொற்றியூரை சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் தியாகராயநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் வேலைபார்த்து வந்த புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்தசாமி (வயது 27) என்பவர் நட்பாக பழகினார். இந்த நிலையில் அலுவலகம் தொடர்பாக தேர்வுக்கு சென்ற போது இளம்பெண் தனது செல்போனை, நண்பரான அரவிந்தசாமியிடம் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அந்த செல்போனில் இளம்பெண் தனக்கு இருந்த தோல் வியாதி தொடர்பாக டாக்டரிடம் காண்பிப்பதற்காக தனது உடலை படம் எடுத்து வைத்து இருந்தார். இதனை பார்த்த அரவிந்தசாமி அந்த புகைப்படங்களை திருடி தனது செல்போனுக்கு அனுப்பிக்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து வேலையை விட்டு சென்ற அரவிந்தசாமி, தற்போது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அரவிந்தசாமி, இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது அந்தரங்க படங்களை அனுப்பி உல்லாசத்து அழைத்தார்.

மேலும் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினார். இல்லையெனில் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது அரவிந்தசாமி இளம்பெண்ணின் புகைப்படத்தை காட்டி மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com