'நான் சாகும்வரை முஸ்லிம்தான், ஆனால்....' - வைரலாகும் குஷ்பூவின் வலைதள பதிவு

ரசிகர் ஒருவர் பா.ஜ.க குறித்து குஷ்பூ பகிர்ந்திருந்த பழைய பதிவு ஒன்றை தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
'நான் சாகும்வரை முஸ்லிம்தான், ஆனால்....' - வைரலாகும் குஷ்பூவின் வலைதள பதிவு
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பூ. ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்ற குஷ்பூ நடிப்பது மட்டுமல்லாமல் பா.ஜ.க கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என அறிவித்து இருந்தார். மேலும் அவர் 'தற்போது பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் நாம் ராமரை பார்க்க இருக்கிறோம். ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது' என்றும் தெரிவித்து இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சமூக பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் பா.ஜ.க குறித்து குஷ்பூ பகிர்ந்திருந்த பழைய பதிவு ஒன்றை தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக குஷ்பூ தனது பதிவில், 'நான் சாகும்வரை முஸ்லிம்தான் சகோதரனே. நான் மதம் மாறவில்லை, மாறவும் மாட்டேன். உங்களை பொறுத்தவரை எல்லாம் ஆன்மீகம் மதம் சார்ந்தது. ஆனால் என்னை பொறுத்தவரை ஆன்மீகம் ஒருமைப்பாடு பற்றியது.

கடவுள் ஒருவரே என்று நான் நம்புகிறேன். ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள்' என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com