மல்லிகார்ஜுன கார்கே விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மல்லிகார்ஜுன கார்கே விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், பேஸ் மேக்கர் கருவி பொருத்த அறிவுறுத்தினர். இதையடுத்து, அவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்படது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே விரைவில் குணமடைய வேண்டுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் முழுமையாக குணமடைய வேண்டுகிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும், தனது பணிகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com