

சென்னை,
நில சீர்திருத்த ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜூ, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர்-1 ஆக மாற்றப்பட்டு உள்ளார்.
சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முன்னாள் செயலாளர் எஸ்.மதுமதி, ஆதிதிராவிடர் நலன் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முன்னாள் ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், மீன்வளத் துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.
சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் எஸ்.ஏ.ராமன், தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
உயர் கல்வி இணைச் செயலாளர்
கடலூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி, ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை இணைச்செயலாளராக மாற்றப்பட்டார்.
மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் டி.அன்பழகன், சர்க்கரை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். சமக்கிர சிக்ஷா திட்ட முன்னாள் கூடுதல் மாநில திட்ட இயக்குநர் எஸ்.அமிர்ந்த ஜோதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
தர்மபுரி மாவட்ட முன்னாள் கலெக்டர் எஸ்.பி.கார்த்திகா, உயர்கல்வித் துறை இணைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணைச் செயலாளர் ஆஷிஷ் சட்டர்ஜி, மத்திய அரசுப்பணிகள் நிறைவை தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர்-2 ஆக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சுதாதேவி மாற்றம்
தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டி.கிறிஸ்துராஜ், பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நிதி மின் கழகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சந்திரகாந்த் பி.காம்ளே, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் எம்.சுதாதேவி, தமிழ்நாடு நீர்வடி மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.