

சென்னை,
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
(அடைப்புக்குறிக்குள் இருப்பது பழைய பதவி)
கவிதா ராமு அருங்காட்சியகங்கள் இயக்குனர் (தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்).
டி.அன்பழகன் ஆவணக் காப்பக இயக்குனர் (எல்காட் பொது மேலாளர்).
எஸ்.சிவராசு கோயம்புத்தூர் வணிக வரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர் (திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்).
எஸ்.பி.அம்ரித் மதுரை டி.ஆர்.டி.ஏ. திட்ட அதிகாரி/ கூடுதல் கலெக்டர் (மேம்பாடு) (கோவை வணிகவரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர்).
பி.உமா மகேஸ்வரி தமிழ்நாடு சுகாதார முறை திட்ட இயக்குனர் (தமிழ்நாடு மருந்து சேவைகள் கழக பொது மேலாளர்).
பி. ஸ்ரீவெங்கட பிரியா சேலம் பட்டு வளர்ப்பு இயக்குனர் (கோவை தமிழ்நாடு சிவில்சப்ளைஸ் மூத்த மண்டல மேலாளர்).
ஆர்.சீதாலட்சுமி ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனர் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணை மேலாண்மை இயக்குனர்).
எஸ்.பி.கார்த்திகா சர்க்கரை கூடுதல் இயக்குனர் (சென்னை மதுவிலக்கு மற்றும் கலால்வரி இணை கமிஷனர்1).
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மறுவாழ்வு இயக்குனர் (முதல்அமைச்சர் அலுவலக இணைச் செயலாளர்).
எஸ்.வளர்மதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை செயலாளர் (மாற்றுத்திறனாளிகள் நலன் இணை கமிஷனர்).
கே.பேச்சியம்மாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை துணை செயலாளர் (எழுதுபொருள் அச்சு இணை இயக்குனர்).
பி.மணிமாறன் கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை துணைச் செயலாளர் (தமிழ்நாடு சிவில்சப்ளைஸ் மூத்த மண்டல மேலாளர்).
ஆர்.நந்தகோபால் தொழிலாளர்கள் இணை கமிஷனர் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையின் அலுவல் சாரா இணை செயலாளர் (கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இணைச் செயலாளர்).
டி.மோகன் கவர்னரின் துணைச் செயலாளர் (கவர்னரின் துணைச் செயலாளர் (பல்கலைக்கழகங்கள்).
கே.பாலசுப்பிரமணியம் தொழில்துறை துணைச் செயலாளர் (சிட்கோ பொது மேலாளர்).
கே.வி.முரளிதரன் கவர்னரின் துணைச் செயலாளர் (கவர்னரின் துணைச் செயலாளர் கவர்னர் இல்ல செலவுக் கட்டுப்பாட்டாளர்).
கலைச்செல்வி மோகன் நகராட்சி நிர்வாக இணை கமிஷனர் (மதுவிலக்கு மற்றும் கலால்வரி இணைக் கமிஷனர்2).
வி.ராஜாராமன் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத் தலைவர் (நகராட்சி நிர்வாக இணை கமிஷனர்).
பி.ரமண சரஸ்வதி மின்னாளுமை முகமை இணை இயக்குனர் (தமிழ்நாடு அரசு கேபிள்டிவி கழக பொது மேலாளர் (நிர்வாகம்).
ஜெ.விஜயராணி நில நிர்வாக இணைக் கமிஷனர் (நில நிர்வாக கமிஷனர் அலுவலக இணை கமிஷனர் (எல்.ஏ.).
பி.பிரபாகர் போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் (சென்னை நெடுஞ்சாலைகள் மாவட்ட வருவாய் அதிகாரி (நில ஆர்ஜிதம்).
ஏ.ஜான் லூயிஸ் தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர் (முதல்அமைச்சர் அலுவலக துணைச் செயலாளர்).
எஸ்.அமிர்த ஜோதி தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் (தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்).
ஏ.சண்முகசுந்தரம் அண்ணா மேலாண்மை நிறுவன கூடுதல் இயக்குனர் (பெருநகர சென்னை மாநகராட்சி 14வது மண்டல அதிகாரி).
மகேஸ்வரி ரவிகுமார் பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) (சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி (முத்திரை).
எஸ்.நடராஜன் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரி (போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.