ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
Published on

அமுதா ஐஏஎஸ் வகித்து வந்த கூடுதல் பொறுப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளதுசென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றார்.

இதனிடையே, தமிழகத்தில் புதிய அரசு அமைந்த நிலையில் நிர்வாக ரீதியில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் வருவாய்த்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வளர்ச்சி, கலாசாரத்துறை செயலாளராக சொர்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண் இயக்குநராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமுதா ஐஏஎஸ் வகித்து வந்த கூடுதல் பொறுப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது

Attachment
PDF
IAS Transfers & Postings - 12.05.2026
Preview
X

Daily Thanthi
www.dailythanthi.com