மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்

மாணவர்களிடையே எத்தகைய திறமைகள் உள்ளது என கண்டறிந்து அதை ஊக்குவிக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்
Published on

பயிற்சி வகுப்பு

திருப்பத்தூர் அருகே தனியார் பெறியியல் கல்லூரியில் எஸ்.ஐ.டி.பி. 2.0 பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அப்பேது அவர் பேசியதாவது:-

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் செயல்படுத்துவதற்கு முக்கிய காரணம் இந்தியா பேன்ற மக்கள் தெகை அதிகம் கெண்ட நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகின்ற ஒன்று. ஒரு குடும்பத்தில் தலைவரோ, தலைவியே இல்லாமல் பேனால் வளர்கின்ற குழந்தை குற்ற பின்னணி உடையவர்களாக மாறுகின்ற சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது.

ஊக்குவிக்க வேண்டும்

அதனால் மாணவர்களிடையே திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் சிந்தனையை வளர்த்துக்கெண்டு, பயன்படுத்துகின்ற பெழுது சாதாரணமாக கண்டுபிடிப்புகள் உருவாகும். அத்தகைய மாணவர்களிடையே உள்ள திறமைகளை தட்டி எழுப்புகின்ற பெழுது, அவர்களை மேன்மையானவர்களாக மாற்றுவதற்கு சாத்திய கூறுகள் இருக்கிறது. ஆகவே வழிகாட்டி ஆசிரியர்களான நீங்கள் மாணவர்களிடையே எத்தகைய திறமைகள் உள்ளது என கண்டறிந்து அதை ஊக்குவிக்கின்ற பெழுது, அவர்களால் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் இளவரசி, கள ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com