மத்திய மந்திரி பதவி கொடுத்தால்... எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கிய அமைச்சர் நிர்மல் குமார்

40, 50 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் பணி செய்தவர்கள் கைவிடப்பட்டு உள்ளனர் என கூறினார்.

மத்திய மந்திரி பதவி கொடுத்தால்... எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கிய அமைச்சர் நிர்மல் குமார்
Published on

மதுரை

மதுரை அவனியாபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறும்போது, நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மாற்றுக்கட்சியில் உள்ளவர்கள், அவர்களின் தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் த.வெ.க.வில் இணைகிறார்கள்.

அடுத்த சில வருடங்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, மத்திய மந்திரி பதவி கொடுத்தால் அ.தி.மு.க.வை, பா.ஜ.க.வுடன் இணைக்க கூட அவர் தயங்கமாட்டார். 40, 50 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் பணி செய்தவர்கள் கைவிடப்பட்டு உள்ளனர்.

தி.மு.க. முன்பு கருணாநிதி குடும்பமாக இருந்தது. தற்போது ஸ்டாலின் குடும்பமாக மாறி இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இதற்கு முன்பு எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போதைய முதல்-அமைச்சர், விரைவான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறார். விரைவில் எய்ம்ஸ் பணிகள் நிறைவுபெறும் என கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com