நான் நன்றாக படித்திருந்தால் பெரிய அளவில் வந்திருப்பேன் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

பெற்றவர்கள் நமக்காக படும் கஷ்டங்களை மனதில் நினைத்து கொண்டு நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என கூறினார்.
நான் நன்றாக படித்திருந்தால் பெரிய அளவில் வந்திருப்பேன் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டார அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2021-2022 கல்வி ஆண்டில், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.

மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பின்னர் அவர் மாணவ-மாணவிகளிடையே பேசுகையில்,

எனது அம்மா அப்போவே என்னை நன்றாக படிக்க சொன்னார்கள். ஆனால் நான் அப்போது சரியாக படிக்கவில்லை. நன்றாக படித்திருந்தால் இன்னும் பெரிய ஆளாக வந்திருப்பேன். அப்போது நன்றாக படிக்கவில்லை என இப்போது கவலைப்படுகிறேன்.

 நீங்கள் எதிர்காலத்தில் கவலை கொள்ள கூடாது. வறுமையான குடும்பங்களில், மிகவும் கஷ்டப்பட்டு பெற்றோர்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். பெற்றோர்கள் நாம் படும் கஷ்டம் நமது பிள்ளைகள் படக்கூடாது என நினைத்து கடன் வாங்கி படிக்க வைக்கின்றனர்.

பெற்றவர்கள் நமக்காக படும் கஷ்டங்களை மனதில் நினைத்து கொண்டு நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com