

சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் பேட்டி ஒன்றில், த.வெ.க. அரசுக்கு தங்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும், தி.மு.க.வுடன் நட்புடன் இருப்பதாகவும் கூறியிருந்தார். திருமாவளவனின் இந்த கருத்து குறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த வைகோ, "திருமாவளவனுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்" என்று கிண்டலாக கூறினார். இந்நிலையில், வைகோவின் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவரது பரிந்துரைக்கு நன்றி. நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன்" என்று பதில் அளித்தார்.