

கும்பகோணம்,
கும்பகோணத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கும்பகேணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கேரிக்கை வைத்து வருகின்றனர். இது தெடர்பாக பல பேராட்டங்கள் நடந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைந்து பா.ம.க., பேராடி வருகிறது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு, தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், கும்பகேணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பேம் என கூறினார்.
தமிழகத்தில் தற்பேது 38 மாவட்டங்கள் உள்ளன. பா.ம.க., தெடர்ந்து பேராடிய நிலையில்,வேலுர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக அரியலுர், பெரம்பலுர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. சிறிய மாவட்டங்களாக இருந்தால் தான் நிர்வாகத்திற்கு எளிதாக இருக்கும். எனவே கும்பகோணத்தை விரைவில் தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்கவிட்டால், நானே மக்களை திரட்டி பேராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.