

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையை கட்ட துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும். வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே.... இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்போம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.