

சென்னை,
சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது;
”அண்ணன் காப்பாற்றுவாரென நம்பி வாக்களித்த பெண்கள், காவல் துறைகூட இல்லை என கதிகலங்கி நிற்கும் நிலை உள்ளது. 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் 570 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் பெரும்பாலும் பெண்களுக்கு எதிரானவை. ஆண்களே வெளியில் சென்று வருவார்களா என தெரியவில்லை. மக்கள் மனதில் பயத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
தாய்மாமன் சீர், திருமணத்துக்கு அண்ணன் சீர்வரிசை.. இதெல்லாம் வேண்டாம். குழந்தைகளுக்கு போதுமான மருந்து இல்லை.. மருத்துவர்கள் இல்லை.. அதைப்பற்றி கவலை இல்லை. நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை தங்க மோதிரம் வாங்க செலவிட்டுள்ளனர். மருத்துவர்களை நகைக்கடையில் நிக்க வச்சிட்டீங்க. தவெக ஆட்சி நீடித்தால் தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி செல்லும்.”
இவ்வாறு அவர் பேசினார்.